திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மானூர் கிராமத்தில், மன்னார்சாமி சமேத பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த 10 ம் தேதி மாலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கும், மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 10.20 மணிக்கு மூலவர் பச்சைவாழியம்மன் , பரிவார மூர்த்திகள், முனி சிலைகள், குதிரை சிலை, மன்னார்சாமி, கோவில் நுழைவு வாயில் வளைவு ஆகியவற்றிற்கு புனித கலச நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.