திருக்கோயிலூர்: திருக்கோயிலூர் அடுத்த ஆயந்தூர் பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆயந்தூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிடாரியம்மன் கோயிலில் இதையடுத்து திருப்பணிகள் முடிந்துகடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று கும்பாபிஷேகம் கோலகலமாக நடந்தது. காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை கடம் புறப்பாடாகி சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் வேதவிற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க, சென்னை ஐகோர்ட் நீதிபதி மாலா முன்னிலையில் மூலகலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.