மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2014 05:03
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலில் பங்குனித் திருவிழா மார்ச் 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முக்கியத் திருவிழாவான தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கபாலீசுவரர் உடனுறை கற்பகாம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு மாடவீதிகளிலும் பக்தர்கள் கூட்டத்தின் நடுவே தேர் மெல்ல அசைந்தாடி வந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கபாலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நாளை (மார்ச் 14) வெள்ளி விமானத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சியளிக்கும் விழா நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை நாதஸ்வர நிகழ்ச்சியும்,18ம் தேதி முதல் 27ம் தேதி வரை சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.