ஆரணி: முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் பூஜிக்கப்பட்ட புனித கலசங்களை மேள தாளங்களுடன் கோவில் வலம் வந்து ராஜகோபுரம், கருவறை கோபுரம், விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, நவகிரக சன்னதி, கோபுரங்ளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.