பொள்ளாச்சி : பொள்ளாச்சி போடிபாளையம் தத்துவஞான சபையில், பழனியப்ப சுவாமிகள் 11ம் ஆண்டு குரு பூஜை விழா மற்றும் 100வது ஆண்டு விழா நடந்தது. உடுமலை ஞானஜோதி தங்கவேல் வரவேற்றார். தொழிலதிபர் மகாலிங்கம் தலைமை வகித்தார். ஊத்துக்குளி ஜமீன் அருண்ராஜ் காளிங்கராயர், கதிர்வேல் காளிங்கராயர், மாணிக்கத்தாய் முன்னிலையில், நுால் வெளியீட்டு விழா நடந்தது. தங்கராசு சுவாமிகள், அஜித்சைதன்ய சுவாமிகள், ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசினர்.