குஜிலியம்பாறை,: பாலப்பட்டி ஊராட்சி மாரப்பன்பட்டியில், விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தீர்த்தம் அழைத்தல், வாஸ்து சசாந்தி, இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, புனித நீர் ஊற்றி விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. வள்ளிபட்டி, கூம்பூர், அழகாபுரி உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். கும்பாபிஷேக பணிகளை கணேச சிவாச்சாரியார் உள்ளிட்ட குருக்கள் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.