திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் வருஷாபிஷேகம் நேற்று நடைபெற்றது.விழாவில் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்பு கோபுர விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சன்னதி முன் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.