கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு பானக்காரம் படைத்து பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2014 03:03
நாகர்கோவில்: பங்குனி, சித்திரை
மாதங்கள் கோடைக்காலம் ஆகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக
இருக்கும். அக்கினி நட்சதிரம் ஆரம்பித்தவுடன் வெயிலின் உக்கிரம் அதிகரித்து
அனல் காற்று வீசும். இறைவனுக்கு கோடைகாலத்தில் வெப்பம் நீங்கி
குளிர்ச்சியுடன் இருப்பதற்காக கோயில்களில் பானக்காரம் என்ற குளிர் பானம்
மாலை நேரத்தில் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
கன்னியாகுமரிபகவதி அம்மனுக்கும் கோடைகாலத்தின் வெப்பம் நீங்கி
குளிர்ச்சியாக இருப்பதற்காக பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்களில் தினமும்
மாலை 4 மணிக்கு கோயில் நடைநிறந்தவுடன் பானக்காரம் நிவேந்தியமாக படைத்து
சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை
முடிந்ததும் அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக
வழங்கப்படுகிறது.