காரைக்கால்: காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் மார்ச் 19ம் தேதி சூசையப்பர் தினமாக கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை மாலை தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மின் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் சூசையப்பர் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.