Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விரதநாளில் அடிக்கடி தண்ணீர் ... பிரம்ம முகூர்த்த வேளையின் சிறப்பு தெரியுமா? பிரம்ம முகூர்த்த வேளையின் சிறப்பு ...
முதல் பக்கம் » துளிகள்
இறைவனிடம் எப்படி வேண்ட வேண்டும்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 மார்
2014
04:03

மனிதனின் ஆசைகள், எல்லைகள் அற்று, விரிந்து கொண்டே செல்லக் கூடியவை என்பதால், ஆசைக்கு அளவில்லை என்றனர். அத்தகைய ஆசைகளே, மனிதனின் துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். பிரார்த்தனையின் போது கூட, நாம், கடவுளிடம், ஆத்ம ஞானத்தையோ, முக்தியையோ வேண்டுவதில்லை. மாறாக, நம் ஆசைகளை, விண்ணப்பங்களாக சமர்ப்பித்து, அஸ்திவாரமே இல்லாமல், அரண்மனை கட்ட விரும்புகிறோம்; அல்லல்படுகிறோம். மகாபாரதத்தில், பாண்டவர்களுக்காக கண்ணன் தூது சென்ற போது, நடந்த நிகழ்ச்சி இது: கண்ணன், துரியோதனனிடம் தூது செல்லத் தயாராகிறார். சகாதேவனைத் தவிர, மற்ற ஐவரும் (திரவுபதி உட்பட) தங்கள் கருத்தை கூறினர்.

ஞானியான சகாதேவன், கண்ணனுடைய தெய்வத் தன்மையை விரிவாக வர்ணித்து, கண்ணா... பரம்பொருளே... ஆட்டி வைப்பவன் நீ! உன் திரு உள்ளத்தில் நினைத்திருப்பதை, எங்களால் எப்படி அறிய முடியும். உன் விருப்பத்தை ஏற்க வேண்டியவர்கள் நாங்கள்... என்றெல்லாம் சொல்லி, கடைசியாக, இந்தப் பாரதப் போரில், உன்னை சரணாகதி அடைந்திருக்கும் எங்கள் ஐவரையும், நீ, காக்க வேண்டும்... என, வேண்டுகிறார். அவர் வேண்டியது அப்படியே நடக்கிறது. ஆனால், அவர்களின் பிள்ளைகளான, உப பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டனர். அதனால்தான், முனிவர்களும், ஞானியரும், கடவுளிடம், அதைக் கொடு; இதைக் கொடு என்று, வேண்டுவதில்லை. மாறாக, அவன் விருப்பத்திற்கு, தங்கள் வாழ்க்கையை ஒப்படைப்பதாக கூறி, முழு சரணாகதி அடைகின்றனர்; காக்கப்படுகின்றனர். ஆகையால், ஆண்டவனிடம், அதையும், இதையும் வேண்டாமல், தூய்மையான பக்தியை மட்டும் வேண்டுவோம்!

 
மேலும் துளிகள் »
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி இன்று. இரவு சந்திரன் ... மேலும்
 
temple news
தினமும் அதிகாலையில் நவக்கிரகங்கள் ஒன்பதும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் திருவடி தரிசனம் பெற ... மேலும்
 
temple news
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. கார்த்திகை நாளில் ... மேலும்
 
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar