மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா: ஏப். 9ல் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2014 04:03
மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஏப்.9ல் நடைபெறுகிறது. அன்று மாலை மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி புறப்பட்டு மாசி வீதிகளில் வலம் வருகிறார். பின் தெப்பக்குளம் வந்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்குப் பூச்சொரிதல் பூஜை நடைபெறுகிறது.