மேற்கு மாம்பலத்தில் பச்சை சாயிபாபா தரிசன மையம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2014 11:03
மேற்கு மாம்பலம்: மேற்கு மாம்பலத்தில், பச்சை சாயிபாபா தரிசன மையம் நேற்று துவக்கப்பட்டதை அடுத்து, ஏராளமான பக்தர்கள் சாயிபாபாவை தரிசனம் செய்தனர். மேற்கு மாம்பலம், ராஜேந்திர பிரசாத் இரண்டாவது தெருவில், "பச்சை சாயிபாபா தரிசன மையம் நேற்று காலை, சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டது. காலை 7:00 மணிக்கு குத்து விளக்கேற்றி வழிபாடு நடந்தது. பின், கணபதி ஹோமம், சாய் பஜனை நடந்தேறியது. சாயிபாபாவிற்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனையும் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.