மதுரை மீனாட்சி.. சித்திரை திருவிழா மே 1ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2014 12:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 1ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 12 வரை நடக்கும் விழாவில், தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும், மாசி வீதிகளில் உலா வருவர். மே 1 காலை 10.36 முதல் 11.36 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. மே 8 இரவு 7.04 முதல் 7.30 மணிக்குள், அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மே 9ல், திக்குவிஜயமும், மே 10 காலை 10.30 முதல் 10.54 மணிக்குள் திருக் கல்யாணமும் நடக்கிறது. மே 11 காலை 6 மணிக்கு, மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இத்தகவலை கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார்.