புத்துமாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேக நிறைவு விழா பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2014 12:03
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி காவல் புத்துமாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது. விக்கிரவாண்டி போலீஸ் குடியிருப்பில் காவல் புத்துமாரியம்மன் கோவில் கட்டப்பட்டு பிப்., மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மண்டல பூஜைகள் நடந்து நிறைவு விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சந்திர சேகர குருக்கள் தலைமையில் யாக பூஜைகள் நடந்தன. இன்ஸ்பெக்டர்கள் குமார், சந்திர சேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன், மண்ணாங்கட்டி, கந்தசாமி, ஏட்டு விஜயலெட்சுமி, ஆன்மீக சேவகர் பொன்முடி கலந்து கொண்டனர்.