திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஏந்தூர் கிராமத்தில் 23 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திண்டிவனம் வட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ளது ஏந்தூர் கிராமம். இங்குள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனுவாச பெருமாள் கோவில் வளாகத்தில் தனியாக ஆஞ்சநேயர் சன்னதி அமைத்து, அதனருகில் 23 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுதை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு நேற்று காலை 8.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அகில பாரத துணை தலைவர் மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.