திருத்தணி : திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று காலை, தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தணி, திரவுபதி அம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை, 7:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் அம்மன் திருவீதியுலா நடந்தது. அடுத்த மாதம், 2ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 4ம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. மேலும், 13ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நடக்கிறது. மாலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீமிதிக்கும் விழா நடைபெறும்.