பதிவு செய்த நாள்
29
மார்
2014
11:03
காரிமங்கலம்: காரிமங்கலம் மந்தைவீதி மஹா சக்தி ஸ்ரீ மாரியம்மன் கோவில், 35ம் ஆண்டு உகாதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி, நேற்று காலை, 9 மணிக்கு மேல், 10.15 மணிக்குள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், கொடியேற்றமும் நடந்தது. இரவு, 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று, காலை, 10 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், மதியம், 12 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு, 7 மணிக்கு, அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை, 30ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், மதியம், 12 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு, 7 மணிக்கு திருவீதி உலாவும், 31ம் தேதி தெலுங்கு வருட பிறப்பு உகாதி பண்டிகையை முன்னிட்டு, காலை, 9 மணிக்கு மேல், 10.15 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அம்மன் ரத ஏற்றமும், மதியம், 12 மணிக்கு, அன்னதானமும் நடக்கிறது.மதியம், 3 மணிக்கு, மஞ்சள் நீராட்டுதலும், இரவு, 7 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும், 1ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கொடி இறக்கவும், மதியம், 12 மணிக்கு பக்தர்களுக்கு, அன்னதானமும் நடக்கிறது. மாலை, 6.30 மணிக்கு, ஊஞ்சல் உற்சவமும், இரவு, 9 மணிக்கு சயன உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் முன்னாள் சேர்மன் ராமன் மற்றும் தேவகாண்ட்லா சமூகத்தினர் செய்துள்ளனர்.