பரமக்குடி : பரமக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், வேதாத்திரி மகரிஷியின், எட்டாம் ஆண்டு நினைவு நாள் வேள்வி தினம் நடந்தது. நிர்வாக அறங்காவலர் ரவீந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார் விஜயா முன்னிலை வகித்தார். மகாலிங்கம் வேதாத்திரி வேள்வி நடத்தினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகேசன் பேசினார். "உடல்நலத்திற்கு மனவளக்கலையில் உடற்பயிற்சி என்ற தலைப்பில் பிரசாத் பேசினார்.