மயிலம்: மயிலம் கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில் நேற்று சஷ்டியை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறந்து வழிபாடுகள் நடந்தது. 11 மணிக்கு சுவாமி மூலவருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களினால் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சுவாமி வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் 1 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கினார்கள். இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.