சிதம்பரம் : மேலவீதி கோதண்டராம சுவாமி கோவில் பிரமோற்சவத்தையொட்டி சுவாமி ஹனுமன் வாகனத்தில் வீதி புறப்பாடு செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிதம்பரம் மேலவீதி திருச்சித்ரகூடம் கோதண்டராம சுவாமி கோவிலில் விஜய வருட பிரமோற்சவம் விழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் உற்சவத்தையொட்டி தினமும் பத்மாவதி தாயார் சமேத கோதண்டராமர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இதனைத்தொடர்ந்து சுவாமி பல்லாக்கில் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு நடக்கிறது. இரவு பல்வேறு வாகனங்களில் புறப்பாடு செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின், ஐந்தாம் நாள் உற்சவத்தில் சுவாமி, தாயார் ஹனுமன் வாகனத்தில் எழுந்திருளி, நான்கு வீதிகளில் அருள்பாலித்தார். உற்சவம் வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் திருவேங்கடவன், கிருஷ்ணமாச்சாரி, சுதர்சனன் ஆகியோர் செய்து வருகின்றனர்.