கீழக்கரை : கீழக்கரை தட்டாந்தோப்பு வழிகாட்டி பாலமுருகன் கோயிலில், 36ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா காப்புக்கட்டு வைபவத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.ஏப்., 12ல் 1008 திருவிளக்கு பூஜை, ஏப்., 13ல் முத்துச்சாமிபுரம் ஆதிவிநாயகர் கோயிலில் இருந்து காவடி எடுக்கப்பட்டு,காலை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனையுடன் பூஜை, அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தலைவர் மனோகர், செயலாளர் சுதர்சன், நாடார் பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் ஜெயபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் மணிகண்டன், வேலுச்சாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.