மேட்டுப்பாளையம் : சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளிங்கிரி ஆண்டவர், தேவி கருமாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. தேவி கருமாரியம்மன் கோவில் விழா கடந்த மாதம் 25ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இம்மாதம் முதல் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாளை (8ம் தேதி) இரவு 9.00 மணிக்கு அம்மன் அழைப்பும், 9ம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மாலையில் மாவிளக்கு படைத்தலும் நடைபெறுகிறது. 10ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 13ம் தேதி நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து திரிசூலம் எடுத்து வருதலும், 14ம் தேதி தமிழ் வருட பிறப்பு சிறப்பு பூஜையும், 15ம் தேதி கிரிமலைக்கு புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.