கம்பம்: கவுமாரியம்மன் கோயிலில், திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் முடிவடைந்து ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, வருஷாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கம்பம் கவுமாரியம்மன் கோயிலில், சுயம்புவாக அம்மன் எழுந்தருளியுள்ளார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா சிறப்பானது. அக்னிசட்டி எடுத்தல், அதிக எண்ணிக்கையில் நடைபெறும். கடந்த ஆண்டு இந்த கோயில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து, ஓராண்டானதை முன்னிட்டு, கோயிலில் வருஷாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் செய்யப்பட்டது. சர்வ அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வருஷாபிஷேக நிகழ்ச்சிகளில் திருப்பணிக்கமிட்டி உறுப்பினர் ஜெயப்பாண்டியன், செயல்அலுவலர் விஸ்வநாத் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.