திருநகர்: திருநகர் அருகே விளாச்சேசரி அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள 1406வருடத்திய ஸ்ரீபட்டாபிஷேக ராமர் கோயிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாளை( (ஏப். 8) காலை ஏழு மணிமுதல், ஏப்.9) காலை ஏழு மணிவரை 24 நான்கு மணிநேர தொடர் ராம ராம நாம ஜெபம் நடக்கிறது. இதில் கணபதி ஹோமம், நவக்கிரக சசாந்தி, சுதர்சசன, ஸ்ரீராமச்சசந்திர ஹோமம் ஆகியன, தேவ பாடசசாலை குருக்கள் சங்கர் சசர்மா தலைமையில் நடக்கிறது. ஜெபத்தில் பங்கேற்கும் பக்தர்கள் பூஜை பொருட்களை வழங்கி அருளாசி பெற வேண்டுமாய், கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.