Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷிர்டி பாபா பகுதி -15 ஷிர்டி பாபா பகுதி -17 ஷிர்டி பாபா பகுதி -17
முதல் பக்கம் » ஷிர்டி சாய் பாபா
ஷிர்டி பாபா பகுதி -16
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஏப்
2014
05:04

இதோ அந்த அற்புத பதில்! நான் எவ்விதம் அதை மறுக்க முடியும்? பண்டிட், என்னை அவரது குருவானகாகாபுராணிக் என்றல்லவோ எண்ணுகிறார்? காகாபுராணிக்கிற்கு, ரகுநாத மகராஜ் என்றொரு பெயருண்டு. இப்போது, பாபா என்று இன்னொரு பெயரும் இருப்பதாக பண்டிட் கருதுகிறார். என் வடிவில் தம்குருவையே அவர் காண்கிறார். அவரது குரு பக்தியை நாம் அங்கீகரிக்க வேண்டுமல்லவா? எல்லா குருவாகவும் இருப்பது நான்தானே? தம் குருநாதருக்குப் பூசுவது போலவே, என் நெற்றியிலும் சந்தனம் பூசினார். அவர் என் நெற்றியில் சந்தனம் பூசும்போது நான் பாபா அல்ல. காகாபுராணிக் தான்!  இதைக் கேட்ட பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.பின்னர் பண்டிட்டிடம் அதுபற்றி விசாரித்தார்கள். பண்டிட்இருகரம் கூப்பி பாபாசொன்னதை அப்படியே ஒப்புக்கொண்டார். மனிதர்களின் மன ஆழத்தில் ஓடும் எண்ணஓட்டங்களை உள்ளது உள்ளவாறே கண்டறிவதில் பாபாவுக்கிருந்த அபாரமானஆற்றலை எண்ணி எல்லோரும் அதிசயித்தார்கள்.

அதேநேரம், இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது? ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைŒக்தியாக உள்ளிருந்து எல்லோர் எண்ணங்களையும் கண்காணித்துக்கொண்டிருப்பவர் பாபாதானே! என்ற உண்மையையும் சிலர் வெளிப்படுத்தினார்கள்.பொதுவாகவே உயர்நிலை மகான்கள், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.ஐம்புலன்களைஅடக்கி ஆள்வதில்பூரணமான வல்லமை பெற்றதனால், ஐம்பூதங்களை அடக்கி ஆளவும் வல்லமைபெற்றுவிடுகிறார்கள் போலும்.உரன் என்னும்தோட்டியால் ஓரைந்தும் காப்பான் என, ஐம்புலன்கள் என்கிற யானையை மன உறுதி என்றஅங்குசத்தால்அடக்குபவனே மெய்ஞானி என்றல்லவோவள்ளுவம் சொல்கிறது! ஐம்பூதங்களை அடக்கும் அந்த அபாரமானஆற்றலை மனித குலநன்மையின் பொருட்டாகஅத்தியாவசியத் தேவைநேர்ந்தால் மட்டுமே மகான்கள் பயன்படுத்துவார்கள்.

ஸ்ரீஅரவிந்த அன்னை, தான் பயணம் செய்த கப்பலைப் புயல் தாக்கியபோது, உடலை விட்டுத் தனது உயிரைப் பிரித்து வானில் சென்று , புயலைத் தோற்றுவித்த தீய சக்திகளை அதட்டினார்.அவ்விதம் புயலை நிறுத்தி,தன்னுடன் கப்பலில் பயணம் செய்த அத்தனை மக்களையும் காப்பாற்றினார். பாபாவின்வாழ்விலும் அவர் ஐம்பூதங்களையும் தம் கட்டுப்பாட்டில்வைத்திருந்ததைக் குறிக்கும்சம்பவங்கள் பல உண்டு. ஒருநாள் மாலை நேரம்.இருள் கவியத் தொடங்கியிருந்தது. திடீரெனக் கடும் புயலும் பெருமழையும் ஷிர்டியைத்தாக்கலாயின. அரைமணிநேரத்தில் தெருவெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில்இருந்த வீடுகளுக்குள்ளே வெள்ளம் கடகடவெனப்புகுந்தது. வீட்டுக்குள் வைத்திருந்த கோதுமை மாவும் பிற உணவுப் பொருட்களும் நீரில் கரைந்து ஓடின. கூரைகள் பிய்த்துக் கொண்டு காற்றில்பறந்தன. மக்கள் பரிதவிப்போடு இல்லங்களை விட்டு வெளியே வந்து நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனகும்பல் கும்பலாகக் கொட்டும் மழையில் நனைந்து நின்றார்கள்.

இப்போது என்ன செய்வது? இந்தப் புயலிலிருந்தும்மழையிலிருந்தும் எப்படித்தப்பிப்பது? அப்போதுதான் அந்த விந்தையான காட்சியைமக்கள் பார்த்தார்கள்.ஆறறிவுடைய மனிதர்களுக்கு இல்லாத புத்தி, ஐந்தறிவுடைய மிருகங்களுக்கு இருக்கும்போல் தோன்றுகிறதே!ஆடுமாடுகள் கூட்டம்கூட்டமாக பாபாவின் மசூதிக்கு ஓடோடிச் செல்வதை அவர்கள் கவனித்தார்கள். கொட்டும்மழையில் கோவர்த்தனகிரியைத் தூக்கி நின்று கோகுலத்துஆனிரைகளைக் காப்பாற்றிய கண்ணனின் அவதாரம்தான் பாபா என்பது ஆடுமாடுகளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவை மசூதி வாயிலில் பாபாவின் கருணை வேண்டி நின்றன.அந்த அற்புதக் காட்சியைப் பார்த்த எல்லா மக்களும்,ஆனிரைகளைப் பின்பற்றித்தாங்களும் மசூதி நோக்கி ஓடலானார்கள். எல்லோரும் பாபா! எங்களைக் காப்பாற்றுங்கள்! என்று உரத்துக் குரல்கொடுத்தவாறே, அவரிடம் தஞ்சம் புகுந்தார்கள்.மனித குலத்தை ரட்சிப்பதற்கென்றே வந்த அவதாரமல்லவா பாபா? மக்களையும், ஆடுமாடுகளையும் பரிவோடு பார்த்தார் அவர். பின் திடீரெனச் சீற்றத்தோடு எழுந்து மசூதிக்கு வெளியே வந்தார். ஆகாயத்தை உற்றுப் பார்த்தார்.

இடியும் மின்னலும் பேய்க்காற்றும்ஷிர்டியையே உலுக்கிக்கொண்டிருந்தன.அவரது விழிகள் கோவைப் பழமாய்ச் சிவந்தன. பரமசிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்ததுபோல் இருந்தது அவரைப் பார்க்க! வானை நோக்கிஉறுமினார் அவர். நிறுத்து! போதும் உன் சீற்றம்! எங்கு வந்து யாரிடம்ஆட்டம் போடுகிறாய்? உன் வாலை ஒட்ட நறுக்கிவிடுவேன் தெரிகிறதா? இந்த நரித்தனமான வேலைகளெல்லாம் இங்கு வேண்டாம். ஆடுமாடுகள்,தாவரங்கள் உள்படஇங்கிருப்பவர்கள் எல்லோரும், என் பாதுகாப்பில் உள்ளது உனக்குத் தெரியாதா?ஜாக்கிரதை. உடனே கடையைக்கட்டு. ஓடு இந்த இடத்தை விட்டு! ஒருகணம் கூட நிற்காதே. பாபாவின் முழக்கத்தைக் கேட்ட மக்கள் அச்சத்தோடு வியந்து, வாய்பொத்தி நின்றார்கள். அது வெறும் முழக்கமல்ல. இடி முழக்கம். ஏன், இடியின் ஓசையையும் அடக்கி அதற்கும் மேலான ஒலியில் முழங்கிய முழக்கம்.அடுத்த கணம்ஆகாயத்தில் இருந்த மோட்டார் ”விட்சை யாரோ அணைத்த மாதிரிசடக்கென்று மழை நின்றது. தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பதுபோல், புயல் குளிர்ந்த தென்றலாய் மாறி பாபாவின் பாதங்களைப் பணிவோடுவருடியது. மக்கள் பரவசத்தோடு பாபாவைக் கும்பிட்டார்கள். பின் மெல்லமெல்லக் கலைந்துவீடுகளுக்குச் சென்றார்கள்.

ஆடுமாடுகளைத் தடவிக் கொடுத்தார் பாபா. ஆனிரைகள் பாபாவைப் பிரிந்துசெல்ல மனமே இல்லாமல் தயங்கித் தயங்கி நடந்துசென்றன. தன்னை நாடிவந்த மக்களும், ஆடு மாடுகளும் இல்லம்திரும்புவதைக் கருணையோடு பார்த்தவாறே மசூதி வாயிலில் நின்று கொண்டிருந்தார் பாபா. வானத்தில் அப்போதுதான் தோன்றிய முழு நிலவுபயபக்தியோடு இந்தவிந்தையான காட்சியை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மழையை மட்டுமல்ல,நெருப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பாபா. ஒருநாள்...மசூதியில் மக்கள்கூடியிருந்த நேரம்....
மசூதியில் எப்போதும் துனி என்ற நெருப்பு எரிந்து கொண்டிருக்குமே! திடீரென அந்த நெருப்பு ஓங்கி எரியலாயிற்று. சடசடவெனப் பற்றிய நெருப்பு, மசூதியின் மேற்பகுதியைத் தொட்டுவிட்டது. இந்த நெருப்பு இப்போது எல்லா இடங்களிலும் பரவும்போல் தோன்றுகிறதே!மக்கள் பதைபதைத்தார்கள்.பாபா, தம் கையில் தாம்எப்போதும் பயன்படுத்தும்சட்கா என்ற கம்பை எடுத்துக்கொண்டார். நெருப்பை நோக்கிச் செல்லாமல் அருகே இருந்த தூணை நோக்கிச் சென்றார்! என்ன செய்யப்  போகிறார் பாபா?..

 
மேலும் ஷிர்டி சாய் பாபா »
temple news
உண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. ... மேலும்
 
temple news
ஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, ... மேலும்
 
temple news
ஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி  சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் ... மேலும்
 
temple news
ஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்! அவனை ... மேலும்
 
temple news
கானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar