காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் ராம நவமி உற்சவத்தையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து திருவாராதனம் அர்ச்சனை, பிஜதானம் ஸ்ரீராம ஜனனம் நடந்தது.மாலை சாயராட்ஷை ஆராதனம், 7 மணிக்கு சகஸ்ரநாமம அர்ச்சனையுடன் தீபாரதனை நடந்தது. 18ம் தேதி சீதாராம திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.இதேபோல் திருப்பட்டினம் ரகுநாத பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவ விழா நேற்று துவங்கியது.காலை 7 மணிக்கு அனுமந்த் வாகனத்தில் ராமர் வீதி உலா நடந்தது. காலை 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை சாயரட்சைச, சசகஸ்கர நாம அர்ச்சனை நடந்தது.இரவு சீதா லட்சுமண அனுமந் சமேதராக ரகுநாத பெருமாள் புறப்பாடு நடந்தது.