பதிவு செய்த நாள்
10
ஏப்
2014
11:04
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செப்பு தேர் வெள்ளோட்டம், நேற்று நடந்தது. ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணத்தன்றும், வடபத்ரசாயி கோயில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போதும், செப்பு தேராட்டோம் (சிறிய தேர் ) நடப்பது வழக்கம். இந்த தேர் செய்து, பல ஆண்டுகள் ஆனதால், அதை 20 லட்சம் ரூபாய் செலவில் செப்பனிட்டு, புது பெயின்ட் அடித்து, மரச்சக்கரங்கள் கழற்றப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன் இரும்பு சக்கரங்கள் மாற்றப்பட்டது. தற்போது செப்பனிடும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, ஆண்டாள் கோயில் திருக்கல்யாண உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. இதில், 13 ம் தேதி நடக்கும் உத்தரதினத்தன்று காலையில், செப்பு தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, செப்பனிடப்பட்ட புதிய செப்பு தேர், முன்னோட்டம் நடந்தது. தேர், நான்கு ரதவீதிகள் சுற்றி வந்து, நிலை வந்தது. கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.