பூமிநீளா சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2014 12:04
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடுகபாளையம் பூமிநீளா சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. பொள்ளாச்சி வடுகபாளையம் பூமிநீளா சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார் திருக்கல்யாண வைபவ மகோத்சவ விழா வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விஸ்வஞ்ேஸநாரதனம், புண்யாகவாஜனம், மகா அபிேஷகமும், காலை 10:00 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் திருக்கல்யாண மகோத்சவமும் நடைபெறுகிறது.