திருப்பூர்: திருப்பூர் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. திருப்பூர் மாவட்டம் லட்சுமிநகர் மாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி பொங்கல் பூச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. நேற்று நடந்த முக்கிய விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.