புவனகிரி: புவனகிரி செல்வ கொளஞ்சியப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, வேத விற்பன்னர்களைக் கொண்டு நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கன்னிகா பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, நவக்கிரக பூஜை செய்யப்பட்டு கடம் புறப்பாடாகி, நேற்று முன்தினம் காலை 6:50 மணிக்கு வேத விற்பன்னர்களால் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பழனிவேல், குமரவேல் செய்திருந்தனர்.