பதிவு செய்த நாள்
12
ஏப்
2014
11:04
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், நாளை, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சேர்த்தி சேவை (கனகவல்லி தாயார் உடனுறை உற்சவர் வீரராகவர் காட்சியளித்தல் நிகழ்ச்சி) நடைபெறுகிறது.
நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, அகோபிலமடத்தை சேர்ந்த வைத்ய வீரராகவர் கோவிலில், நாளை (ஏப் 13ம் தேதி) பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறுகிறது. பெருமாள் தாயாருக்கு, விசேஷ திருமஞ்சனம், காலை 11:30 மணிக்கும், திருப்பாவாடை சேவை, மாலை 5:30 மணிக்கும், பெருமாள் தாயார் உள்புறப்பாடு, இரவு 8:30 மணிக்கும், சேர்த்தி சேவை, இரவு 10:00 மணிக்கும் நடைபெறுகிறது.
கெந்தபொடி வஸந்த உற்சவம், ஏப்., 14ம் தேதி, ஜய வருட (தமிழ் புத்தாண்டு) பிறப்பை முன்னிட்டு, சேர்த்தி விஸ்வரூபம், காலை 5:00 மணிக்கும், பெருமாள் திருமஞ்சனம், மதியம் 12:30 மணிக்கும், பஞ்சாங்க படணம், மாலை 3:00 மணிக்கும், கெந்தபொடி வஸந்தம் உற்சவம், மாலை 6:00 மணிக்கும் நடைபெறுகிறது. ஏப்., 15ம் தேதி, காலை 5:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, லட்சார்ச்சனை நடைபெறுகிறது. விசேஷ திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கும், உற்சவர் வீதி புறப்பாடு, இரவு 7:30 மணிக்கும் நடைபெறுகிறது.