பதிவு செய்த நாள்
12
ஏப்
2014
11:04
திருவள்ளூர்: திருவள்ளூர், ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில், உறியடி திருவிழா நடந்தது.
திருவள்ளூர் ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில், ராமநவமி திருவிழா, கடந்த 3ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது. விழாவை முன்னிட்டு, ஆனந்த சாய்ராமிற்கு, தினமும் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், பஜனைகளும் மற்றும் அன்னதானமும் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த உறியடி விழாவை முன்னிட்டு, ஆனந்த சாய்ராமுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம், காலை, 10:30 மணிக்கு, துனி பூஜையும், இரவு 7:30 மணிக்கு, உறியடி விழாவும், இரவு 8:00 மணிக்கு, பாபாவின் தொட்டில் பொருட்களை சந்தான விருத்தி (குழந்தை பாக்கியம்) பெற, சாய் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இரவு 9:00 மணிக்கு, சேஜ் ஆரத்தியுடன், விழா நிறைவு பெற்றது.