திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் (10ம் தேதி) திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அமைச்சாரம்மன் கோவிலிலிருந்து 75 தட்டு வரிசைகளை ஊர்வலமாக பெண்கள் எடுத்துச்சென்றனர். அருட்டுறையில் இரவு 10:30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தன.கிருபாபுரீஸ்வரர் மற்றும் மங்களாம்பிகைக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டது. இரவு 11:30 மணிக்கு ரிஷபவாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோபுர தரிசனம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.