காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2014 11:04
காரைக்கால்: நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு, நேற்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து, ரங்கநாயகி தாயாருடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி மற்றும் கோவில் பக்த ஜனசபாவினர் செய்திருந்தனர்.