திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் நல்லாயன்ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஏசுபிரானை வரவேற்கும் விதமாக குருத்தோலை ஞாயிறு கொண்டாடப் படுகிறது. திருக்கோவிலூர் நல்லாயன் தேவாலயத்தில் இதற்கான சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 7.30 மணிக்கு பங்குதந்தை ஆரோக்கியராஜ், டேவிட்ஜான் தலைமையில், பெண்கள் மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி, பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.தேவாலய வளாகத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. விழா ஏற்பாடுகளை தேவாலாய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.