செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2014 11:04
செஞ்சி; செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டு விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்தனர்.பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. சக்கராபுரம் பகுதி பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். வழக்கறிஞர் பூபதி, பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் அரங்க ஏழுமலை, பேரூராட்சி கவுன்சிலர் பத்மா சாகர், வழக்கறிஞர் வைகை தமிழ் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.