மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் தெப்பல் திருவிழா நடந்தது மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி திருக் கோவில் பங்குனி உத்திரப் பெரு விழா வில் கடந்த 12ம் தேதி தேர் திருவிழா நடந்தது. 13ம் தேதி தெப்பல் உற்சவம் நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. 11.30 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. இரவு ஒரு மணிக்கு மலையடிவாரத்திலுள்ள அக்னி குளத்திற்கு மேள, தாளம் முழங்க சுவாமியை அழைத்து வந்தனர். இரவு 1.30 மணிக்கு தெப்பத்தில் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி சிறப்பு தீபாரதனை நடந்தது. சுவாமி தெப்பலில் மூன்று முறை வலம் வந்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20 பட்ட சுவாமிகள் சிறப்பாக செய்திருந்தார். டி.எஸ்.பி., விமராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியை செய்தனர்.