சேத்தூர் : சேத்தூர் எக்கலாதேவியம்மன் கோயிலின், பூக்குழித்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி, விழாவின் 4,6,7ம் நாளில் அம்மன் வீதி உலா உலா நடைபெறுகிறது.முக்கிய நிகழ்ச்சியாக 22ம் தேதி, பக்தர்கள் பூ இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.23ம்தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடை, தலைவர் ராமமூர்த்தி, துணைத் தலைவர் செல்லப்பிள்ளை மற்றும் நிர்வாக குழுவினர் செய்கின்றனர்.