நாமக்கல்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஸ்வாமி வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.