ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இகோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா ஆலய வளாகத்தில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாள்களுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் பெருமாள் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.