தாராபுரம் : தாராபுரம் அருகே தளவாய்பட்டிணத்தில் காளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பூக்கம்பம் நடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, பூவோடு எடுக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு பொதுமக்களும், பக்தர்களும் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அக்ரஹார வீதி, பேருந்து நிலையம், வடக்கு ரத வீதி ஆகிய வீதிகள் சென்று தேர் நிலையை அடைந்தது. இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.