திருச்செஙகோடு: ஈரோடு மாவட்டம், திருச்செங்கோட்டில் ஒவ்வொரு மாதமும் பெüர்ணமி கிரிவலம் நடைபெறும். இந்த சித்திரைத் திங்களில் இரு பெüர்ணமிகள் வருகின்றன. இருப்பினும், திங்கள்கிழமை மாலை திரளான பக்தர்கள் திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மலையைச் சுற்றி கிரிவலம் வந்தனர். ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில், கைலாசநாதர் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர்.