Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதூரில் சேஷ வாகனத்தில் ... காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிரமோற்சவ தெப்ப திருவிழா! காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் கம்பம் நடுதல் விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஏப்
2014
11:04

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா, கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா தொடங்கியதை தொடர்ந்து, நேற்று அதிகாலை 4 மணிக்கு உற்சவர் கோயில் வீட்டில் இருந்து கிளம்பி, காலை 7 மணிக்கு கோயிலில் எழுந்தருளினார். தொடர்ந்து முல்லை பெரியாற்றில் அத்திமர முக்கொம்பிற்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. அடுத்து கண்ணீஸ்வர முடையார் கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் திருக்கோயில் முறைதாரர்கள் மாற்று விரித்து, முக்கொம்பினை கம்பத்தடி மண்டபத்திற்கு கொண்டு வந்து நட்டனர். தொடர்ந்து முறைதாரர் மாரிச்சாமி, குபேந்திரபாண்டியன் வகையறாக்கள் முக்கொம்பிற்கு சக்தி ஏற்றினர். போடி அரியணன் புல்லணன் செட்டியார் வகையறாக்கள் அரிவாள் மீது நின்று வந்து, முக்கொம்பிற்கு முதல் மரியாதை செய்து தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து பூஜாரிகள், பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். வீரபாண்டி பேரூராட்சி தலைவர் ரத்தினசபாபதி, கோயில் நிர்வாக அலுவலர் சுரேஷ், வீரபாண்டி பேரூராட்சி நிர்வாக அலுவலர் செந்தில்குமார், டி.எஸ்.பி., சீமைச்சாமி, இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர். கோயில் முக்கிய திருவிழா, மே 6ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடக்கிறது. கோயில் கம்பம் நடுதல் நிகழ்ச்சி தொடங்கியதை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பக்தர்கள் விரதம் தொடங்கி, அக்னிசட்டி எடுத்து நகர் வலம் வருவார்கள். நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் இப்போதிருந்தே தங்கள் நேர்த்திக் கடனை செலுத்த தொடங்கி விடுவார்கள், என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar