பதிவு செய்த நாள்
17
ஏப்
2014
12:04
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் எம்.ஜி.ஆர்., நகர் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஸ்வாமி, 9ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதனை தொடர்ந்து, ஸ்வாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 13ம் தேதி காலை ஸ்வாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், ஸ்வாமி வீதி உலாவும், பக்தர்கள் அலகு குத்துதல், தீச்சட்டி, பால்குடம், காவடி ஆட்டம், பூங்கரகம், நையாண்டி, பம்பை, உடுக்கை, வாணவேடிக்கையுடன் பிடாரியம்மன் கோவிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வழியாக, தர்மபுரி மெயின் ரோட்டில் வந்து கோவிலை அடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.