ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று புனித வெள்ளி நடந்தது. இதையொட்டி, சிறப்பு ஆராதனை மற்றும் தியானம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா ஆலயத்தில்சிறப்பு ஆராதனை நடந்தது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் போது, அவர் கூறிய ஏழு வார்த்தைகளை வைத்து முன்று மணி நேரம் தியானம் நடந்தது. சி.எஸ்.ஐ. போதகர் முத்து செல்வன் ஆராதனை நடத்தினார். ஏராளமா@னார் கலந்து கொண்டனர்.