பதிவு செய்த நாள்
21
ஏப்
2014
12:04
சென்னை : தி.நகர், ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில், அடுத்த மாதம் முதல், கோடைக்கால சிறப்பு வகுப்புகள் நடக்க உள்ளன. பள்ளி மாணவர்களின் விடுமுறையை தொடர்ந்து, சென்னையில் பல்வேறு அமைப்புகளின் சார்பில், கோடைக்கால சிறப்பு வகுப்புகள் நடக்க உள்ளன. இந்நிலையில், மே 4 முதல் கோடைக்கால சிறப்பு வகுப்பு நடக்க உள்ளது. மூன்று வாரம் நடக்கும் பயிற்சி முகாம், காலை, 8:30 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, நடக்கிறது. இதில், யோகா, தியானம், பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம், கலாசாரம், பண்பாடு, ஆளுமைத் திறன் பயிற்சி போன்றவை கற்றுத் தரப்பட உள்ளன. 12 முதல் 16 வயது வரை உள்ள மாணவர்கள், பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், அவர்களே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மே 1 தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, 2814 3896, 2814 3514 என்ற எண்களில், தொடர்பு கொள்ளவும்.