கண்டாச்சிபுரம்: பொம்மபுர ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் அகரம் சித்தாமூர் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கெடாரை அடுத்த அகரம் சித்தாமூர் கிராமத்தில் உள்ள பாலவிநாயகர்,பாலமுருகன்,ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேகம், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் நடந்தது. முன்னதாக சந்திரசேகரகுருக்கள் தலைமையில் காலை 6 மணி முதல் கோபூஜை, தன பூஜை, 108 மூலிகை யாகவேள்வி நடந்தன. காலை 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. கெடார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும்.