சிவனது வாகனமாகவும், வாயிற்காப்பாளராகவும் உள்ள நந்தி அவரது கழுத்துப் பகுதியாக குருதப்படுகிறது. சிவாலயத்தில் சிவன் சன்னதியை தலையாக எண்ணிக் கொண்டால், கழுத்துப்பகுதியில் நந்தி இருப்பது தெளிவாகும். தேவர்கள் திருப்பாற்கடலை கடைந்தபோது, கயிறாகப் பயன்பட்ட வாசுகி எனும் பாம்பு களைப்பில் தன்னையறியாமல் விஷத்தை கக்கியது. தேலோகத்தை காக்க சிவபெருமான் அவ்விஷயத்தை விழுங்க, கழுத்தைபிடித்த பார்வதி தேவியார் விஷம் உடலில் இறங்காமல் நிறுத்தினார். கழுத்தில் குமிழ் போன்று விஷம் நின்றது. இதுவே, ஆண்களுக்கு தொண்டையில் இருக்கும் குரல் நாணாக இருக்கிறது. அறிவியல் ரீதியாக தொண்டையின் உள்பகுதியில் இருக்கும் தைராய்டு, இரு கொம்புகளுடன் உள்ள நந்தி போல இருக்கும். இதன் காரணமாக, சிவன் கோயிலின் கழுத்துப்பகுதியில் நந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.