திருவண்ணாமலை கோயில் உண்டியல் காணிக்கை ரூ.73 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2014 01:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், ரூ.73 லட்சத்து 57 ஆயிரத்து 264 ரொக்கம், 280 கிராம் தங்கம், 690 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். பணம் கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கோயில் கருவூலகத்தில் சேர்க்கப்பட்டது.