பதிவு செய்த நாள்
26
ஏப்
2014
10:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து, ஆண்டாள் சூடிய பரிவட்டம் கிளி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தினமும், வடபத்ர சாயிக்கு ஆண்டாள் சூடிக்களைந்த மாலை சாற்றப்பட்டு வருகிறது. அதை போல், ஆண்டு தோறும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், புரட்டாசி விழாவின் 5ம் நாளான கருட சேவையன்று, ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலிலிருந்து செல்லும், ஆண்டாள் சூடிக்களைந்த மாலை சாற்றப்பட்டு வருகிறது. சித்ரா பவுர்ணமியன்று, மதுரை அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் கோலத்துடன் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டத்தை சூடி, வைகையற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
சித்திரை மாதம் : ஸ்ரீரெங்கத்தில் நடைபெறும் தேரோட்ட விழாவிலும், ஆண்டாள் சூடி களைந்த பரிவட்டம்,கிளி சாற்றப்பட்டு, ரங்கராஜ பெருமாள் தேரில் எழுந்தருள்வார். இந்தாண்டு சித்திரை சுவாதி தேரோட்டத்தில், ரங்கநாதர் அணிவதற்கான பரிவட்டம்,மாலை போன்றவைகள், ஸ்ரீவி.,ஆண்டாளுக்கு சார்த்தி, நான்கு மாட வீதிகளும் சுற்றி வரப்பட்டு, ஸ்ரீரங்கத்திற்கு, ஸ்தானிகம் ரமேஷ் தலைமையில் கொண்டு செல்லப்பட்டது. இதில், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.